மருத்துவ, சுகாதாரக்கல்வி மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்காக இறந்த உடல்களை தானம் செய்தல்
உடற் தானம் செய்வதனை சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி கூறுவதுடன் உங்களுடைய இந்த முடிவை நாங்கள் பாராட்டுகிறோம்.
இறந்த பிறகு, உடல் உங்களுக்கு அடுத்தபடியாக உங்கள் மீது உரிமையுள்ள உறவினரின் சொத்தாக மாறும். எனவே, நீங்கள் அவர்களுக்கு அதற்கேற்ப அறிவுறுத்துவது மற்றும் பின்வரும் உடல் ஒப்படைப்பு நடைமுறையை அவர்களுக்குத் தெரியப்படுத்துவது அவசியம்.
- இயற்கை மரணத்திற்குப் பிறகுதான் உடல் தானம் செய்ய முடியும்.
- இறப்பிற்குப் பின் உறவினர்கள் உடற்கூறியல் துறைத் தலைவர்/ துணைப் பதிவாளர் ஆகியோரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
- நீங்கள் உடலை எங்கள் துறைக்கு தானம் செய்வதற்கு முன் கண் தானம் செய்யும் சங்கத்திற்கு கண்களை தானம் செய்யலாம்.
- மரணச் சான்றிதழின் அசல் மற்றும் அதன் நகல், நிறைவேற்றுபவரின் தேசிய அடையாள அட்டை மற்றும் மரணசாசனத்தின் நகல். ஆகியவை உடலை ஒப்படைக்கும் போது திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அசல் இறப்புச் சான்றிதழானது நிறைவேற்றுபவரிடம் திருப்பித் தரப்படும் மற்றும் அதன் நகல் திணைக்களத்தில் சேமிக்கப்படும்.
- இறந்து 8 தொடக்கம் 12 மணி நேரத்துக்குள் இறந்த உடலை ஒப்படைக்க வேண்டும்.
- பின்வரும்உடல்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
-
- 18 வயதுக்கு கீழ்.
- தொற்று நோய்கள் (உதாரணம்: எச்.ஐ.வி, ஹெபடைடிஸ், தோல் வெடிப்புகளில் தொற்று)
- விபத்துகளால் மரணம்.
- தற்கொலை காரணமாக மரணம்.
- புற்றுநோய் காரணமாக மரணம்.
- பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடல்கள்.
7. பிறமுக்கியமான தகவல்கள்
-
- நன்கொடைக்குப் பிறகு உடல் திரும்பபெறவோ அல்லது யாருக்கும் (உறவினர்/ நிறைவேற்றுபவர்) காட்டப்படவோ மாட்டாது.
- யாழ் குடாநாட்டிற்குள் மட்டுமே உடலை பெறுவதற்கான போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
- பல்கலைக்கழக வளாகத்திற்குள் எந்த மத ரீதியான அல்லது வேறு எந்தவிதமான சடங்கு நிகழ்ச்சிக்கும் அனுமதி இல்லை.
- இறந்த உடலை தானம் செய்வதற்கு பல்கலைக்கழகத்திற்கு பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
- இறந்தவரின் சவப்பெட்டி, ஆடை மற்றும் நகைகள் நிறைவேற்றுபவரிடம் ஒப்படைக்கப்படும்.