பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான NIHR உலகளாவிய சுகாதார ஆராய்ச்சிக் குழு: லான்செட் ஆணைக்குழுவுடன் இணைந்து பர்மிங்ஹாம் பல்கலைக்கழகம் மற்றும் கேப் டவுன் பல்கலைக்கழகம் முன்னெடுக்கும் திட்டம்.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான NIHR உலகளாவிய சுகாதார ஆராய்ச்சிக் குழு (VAWG) என்பது பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பாதிக்கும் வன்முறைகளைத் தடுப்பதற்கும், அவற்றுக்குப் பதிலளிப்பதற்குமான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும் தேவையான ஆதாரங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சர்வதேச ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பு முயற்சியாகும். பர்மிங்காம் (Birmingham) பல்கலைக்கழகம் மற்றும் கேப் டவுன் (Cape Town) பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தலைமையில், லான்செட் ஆணைக்குழு மற்றும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள கல்வி மற்றும் பொது சுகாதார நிறுவனங்களுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இத்திட்டம், வன்முறையை ஒரு முக்கியமான பொது சுகாதாரப் பிரச்சினையாகவும், சமூகப் பிரச்சினையாகவும், மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினையாகவும் கருதி அதனை எதிர்கொள்கிறது.
இந்தத் திட்டம், பயனுள்ள தடுப்பு உத்திகளை உருவாக்குவதற்கும், கட்டமைப்புகள் மற்றும் சேவைகளை வலுப்படுத்துவதற்கும், வன்முறையிலிருந்து மீண்டவர்களை மையமாகக் கொண்ட பதிலளிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கும் வழிகாட்டும் வகையில், உயர்தரமானதும் உள்ளூர் சூழல்களுக்கு ஏற்றதுமான ஆய்வுகளை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கொள்கை வகுப்பாளர்கள், நடைமுறையாளர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சமூகங்களுடன் நெருக்கமாக இணைந்து செயல்படுவதன் மூலம், இத்திட்டம் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும், விழிப்புணர்வையும் பொறுப்புக்கூறலையும் அதிகரிப்பதற்கும், ஒருங்கிணைந்த தேசிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் பங்களிக்கிறது. இதன் மூலம், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பாதுகாப்பான சமூகங்கள், பாலின சமத்துவம் மற்றும் நீண்டகால சமூக நலனை மேம்படுத்துவதற்கு இத்திட்டம் ஆதரவளிக்கிறது.