முதலாவது தேசிய பங்குதாரர் கூட்டம்

உலகளாவிய NIHR பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை (VAWG) திட்டத்தின் இரண்டாவது தேசிய பங்குதாரர் கூட்டம் 2025 டிசம்பர் 15ஆம் திகதி கொழும்பு ரெனுகா ஹோட்டலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கல்வித்துறை, சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சேவைத் துறைகளைச் சேர்ந்த முக்கிய பங்குதாரர்கள் ஒன்றுகூடி, திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்ததுடன், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறைகளை வலுப்படுத்துவதற்கான மூலோபாய மற்றும் நெறிமுறை சார்ந்த கருத்துகளையும் வழங்கினர். குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆலோசனைக் குழுக்களை (Survivor Panels) நிறுவுதல் மற்றும் பங்குதாரர்களிடையே விழிப்புணர்வையும் உணர்திறனையும் மேம்படுத்துதல் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடல்களில் இருந்து பெறப்பட்ட பெறுமதிமிக்க வழிகாட்டுதல்கள், திட்டத்தின் அடுத்தகட்டச் செயற்பாடுகளைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்குப் பயனளிக்கும்.