

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை தொடர்பான NIHR உலகளாவிய சுகாதார ஆராய்ச்சித் திட்டத்தின் முதலாவது தேசிய பங்குதாரர் கூட்டம், 2025 செப்டம்பர் 25ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முக்கிய பங்குதாரர்கள் பங்கேற்று, வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆலோசனைக் குழுக்களை (Survivor Panels) நிறுவுவது குறித்து கலந்துரையாடியதுடன், பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட மற்றும் நெறிமுறைக் கோட்பாடுகளுக்கு இணங்கிய திட்ட அணுகுமுறையை வழிநடத்துவதற்கான கருத்துக்களையும் வழங்கினர்.
