
உலகளாவிய NIHR பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை (VAWG) திட்டத்தின் தொடர்ச்சியான ஆராய்ச்சி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஆராய்ச்சியில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை ஈடுபடுத்துவது தொடர்பான பங்குதாரர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக, 2026 ஜூன் 19ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் கூட்ட அறையில் பங்குதாரர்களுடனான கவனக்குழுக் கலந்துரையாடல் (Stakeholder Focus Group Discussion) நடத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலின் மூலம், சாத்தியமான பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கான வழிமுறைகள், அவர்களின் பங்கேற்பைப் பாதிக்கும் தடைகள் மற்றும் அதனை ஊக்குவிக்கும் காரணிகள், அத்துடன் நெறிமுறை சார்ந்தும் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்களை உணர்ந்தும் அவர்களை ஈடுபடுத்துவதற்குத் தேவையான முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்த பெறுமதிமிக்க கருத்துக்கள் பெறப்பட்டன.
இக்கலந்துரையாடலின் கண்டறிதல்கள் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆலோசனைக் குழுக்களை (Survivor Panels) உருவாக்குவதற்குப் பங்களிப்பதுடன், ஆராய்ச்சியில் பாதிக்கப்பட்டவர்களின் அர்த்தமுள்ள, உள்ளடக்கிய மற்றும் நிலையான பங்கேற்பை ஊக்குவிக்கும் உத்திகளை வடிவமைப்பதற்கும் வழிகாட்டும்.