சமூகப் பங்கேற்பு மற்றும் ஈடுபாட்டிற்கான தற்காலிக வசதிப்படுத்துநர் பதவிகள்

டிஜிட்டல் தொற்றுநோயியல் மையம், மருத்துவ பீடம்

DIGIPATHS ஆய்வு: இலங்கையின் ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பில் பல நீண்டகால நோய்நிலைகளை முகாமைத்துவம் செய்வதற்கான டிஜிட்டல் ஒருங்கிணைந்த பராமரிப்புப் பாதைகள்

ஐக்கிய இராச்சியத்தின் தேசிய சுகாதாரம் மற்றும் பராமரிப்பு ஆராய்ச்சி நிறுவகத்தின் (NIHR) நிதியுதவியுடன், பர்மிங்காம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் DIGIPATHS ஆய்வின் கீழ்வரும் பதவிக்கு தகைமையுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் விண்ணப்பங்களைக் கோருகின்றது.

  • சமூகப் பங்கேற்பு மற்றும் ஈடுபாட்டிற்கான தற்காலிக வசதிப்படுத்துநர்கள் – 30 வெற்றிடங்கள்

தேவைகள்

சமூக அடிப்படையிலான, சுகாதாரம் தொடர்பான திட்டங்களில், குறிப்பாக சமூகப் பங்கேற்பு மற்றும் ஈடுபாடு (Community Engagement and Involvement – CEI) சார்ந்த செயற்பாடுகளில் குறைந்தது ஒரு (01) வருட முன் பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

கடமைகளும் பொறுப்புகளும்
  • திட்டத்தின் செயற்பாட்டுத் திட்டங்கள் மற்றும் கால அட்டவணைகளுக்கு அமைவாக, மாவட்ட மட்டத்தில் சமூகப் பங்கேற்பு மற்றும் ஈடுபாடு (CEI) தொடர்பான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளித்தல்.

  • சமூகத் தலைவர்கள், உள்ளூராட்சி அதிகாரிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் மாவட்ட மட்டத்திலுள்ள ஏனைய பங்குதாரர்களுடன் பயனுள்ள உறவுகளை உருவாக்கிப் பேணுதல்.

  • சமூக உறுப்பினர்களின் கருத்துகள், கவலைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் உரிய முறையில் பதிவுசெய்யப்பட்டு கவனத்தில் கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக, அவர்களுடன் தொடர்ச்சியான தொடர்பாடல் மற்றும் ஈடுபாட்டை ஏற்படுத்துதல்.

  • சமூக ஆலோசனைக் கூட்டங்கள், பயிலரங்குகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் ஆதரவளித்தல்.

  • மாவட்ட மட்டத்தில் சமூகத்திடமிருந்து பெறப்படும் கருத்துகள் மற்றும் தகவல்களை ஆய்வு நடைமுறைப்படுத்தல், தரவுச் சேகரிப்பு மற்றும் ஆய்வு முடிவுகளைப் பரப்புதல் ஆகிய செயற்பாடுகளில் ஒருங்கிணைப்பதற்குத் திட்டக் குழுவுக்கு ஆதரவளித்தல்.

  • கூட்டங்கள், வருகைப் பதிவுகள், சமூகத்திடமிருந்து பெறப்படும் கருத்துகள், செயற்பாட்டு அறிக்கைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய தொடர்ச்சியான நடவடிக்கைகள் தொடர்பான துல்லியமான பதிவுகளைப் பேணுதல்.

  • அனைத்து சமூக ஈடுபாட்டுச் செயன்முறைகளிலும் நெறிமுறைத் தரங்களையும் சமூகப் பாதுகாப்புக் கோட்பாடுகளையும் கடைப்பிடித்தல்.

  • சமூகத்தின் பார்வைகளையும் அனுபவங்களையும் எடுத்துக்காட்டும் மாவட்ட மட்ட முன்னேற்ற அறிக்கைகள், சம்பவ ஆய்வுகள் மற்றும் அறிவுப் பகிர்வு ஆவணங்களைத் தயாரிப்பதில் பங்களித்தல்.

  • தேவைப்படும் சந்தர்ப்பங்களில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் தொண்டர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் அறிமுக அமர்வுகளை நடத்துவதற்கு ஆதரவளித்தல்.

  • திட்டத்தின் நாட்டுத் தலைவரால் ஒப்படைக்கப்படும் ஏனைய தொடர்புடைய பணிகளை மேற்கொள்ளுதல்.

ஊதியம்: மாதாந்தம் ரூ. 38,045.00 சம்பளமாக வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்ட அனைத்து பதவிகளுக்குமான பொதுவான நிபந்தனைகள்
  • இலங்கையின் எந்தப் பகுதியிலும் பணியாற்றுவதற்கான தயார்நிலை இருத்தல் வேண்டும்.

  • விண்ணப்பதாரர்கள் தாம் வசிக்கும் பிரதேசத்திற்குரிய கிராம அலுவலரால் வழங்கப்பட்ட நற்பண்புச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். (நற்பண்புச் சான்றிதழ் இல்லாமல் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டா.)

  • தெரிவுசெய்யப்படும் விண்ணப்பதாரர் ஒரு வருட காலத்திற்கு முழுநேர அடிப்படையில் நியமிக்கப்படுவார். அவரது பணித்திறன் மற்றும் திட்டத் தேவைகளின் அடிப்படையில் இந்நியமனம் வருடாந்தம் புதுப்பிக்கப்படலாம்.

  • விண்ணப்பதாரர்கள் இலங்கைப் பிரஜைகளாக இருத்தல் வேண்டும்.

  • வயது 25 முதல் 45 வரையிலானதாக இருத்தல் வேண்டும்.

  • தெரிவுசெய்யப்படும் விண்ணப்பதாரர் ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் (EPF) ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கும் (ETF) பங்களிப்புச் செய்ய வேண்டும். மாதாந்தச் சம்பளத்தில் 8% தொகையை ஊழியர் EPF-க்கு செலுத்த வேண்டும். பணியமர்த்துநர் EPF-க்கு 12% மற்றும் ETF-க்கு 3% பங்களிப்புச் செய்வார்.

திரும்பப்பெற முடியாத ரூ. 100.00 விண்ணப்பக் கட்டணத்தை மக்கள் வங்கியில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேறாளர் பெயரில், கீழ்க்காணும் கணக்கு (குறிப்பு இலக்கம்) மூலம் வைப்பிலிட வேண்டும்.

கணக்கு குறிப்பு இலக்கம்: 3267501300900381

வங்கியில் பணம் வைப்பிலிட்டதற்கான பற்றுச்சீட்டின் பிரதியை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். விரிவான கட்டணச் செலுத்தும் வழிகாட்டலுக்கு கீழுள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்:

கட்டணச் செலுத்தும் வழிகாட்டல்

கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தகைமைகள், அனுபவங்களை உறுதிப்படுத்தும் ஏனைய தொடர்புடைய சான்றிதழ்களின் பிரதிகளுடன் விண்ணப்பங்களைப் பதிவுத் தபால் மூலம் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பிரதி பதிவாளர்,
மருத்துவ பீடம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
ஆதியபாதம் வீதி,
கொக்குவில், யாழ்ப்பாணம்.

அனைத்து ஆவணங்களினதும் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளை fomvacancy@univ.jfn.ac.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 2026 ஜூன் மாதம் 25ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ அனுப்பி வைக்க வேண்டும்.

பல்கலைக்கழகக் கட்டமைப்பு, அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டரீதியான சபைகளில் பணியாற்றும் விண்ணப்பதாரர்கள், தத்தமது நிறுவனங்களின் தலைவர்கள் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

வாசிக்க முடியாத அல்லது முழுமையற்ற விண்ணப்பங்களும், முடிவுத் திகதிக்குப் பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களும் முன் அறிவித்தலின்றி நிராகரிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் தாம் விண்ணப்பிக்கும் பதவியை உறையின் மேல் இடது மூலையில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பம்

விண்ணப்பப் படிவம்

குறுகிய பட்டியலுக்குத் தெரிவுசெய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாத்திரமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வுத் திகதி மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படும்.

பதிவாளர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்